உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடமாற்றத்தில் குளறுபடி பி.டி.ஓ.,க்கள் அதிருப்தி

இடமாற்றத்தில் குளறுபடி பி.டி.ஓ.,க்கள் அதிருப்தி

கடலுார் மாவட்ட, ஊரக வளர்ச்சி துறையில், சமீபத்தில், மாவட்டம் முழுவததும் 22 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் விதிமுறைகள், சரியான முறையில் கடைபிடிக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பி.டி.ஓ.,க்கள் கூறுகையில், கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றுபவர்கள், அவர்களது பணி காலம் முடிந்தபின், ரெகுலர் பி.டி.ஓ., வாக இடமாற்றம் செய்ய வேண்டும்.பி.டி.ஓ., வாக பணியாற்றும் அனைவரும் ரெகுலர் மற்றும் கிராம பி.டி.ஓ., இரண்டுமே பணியாற்றி பிறகுதான் அடுத்த பதவி உயர்வு பெற முடியம். ஆனால், கடலுார் மாவட்டத்தில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் மீண்டும் சிலருக்கு கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், சிலர் ரெகுலர் பி.டி.ஓ., வாகவே இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சி துறை மூலம் போடப்பட்ட இந்த உத்தரவை, கலெக்டர் விசாரணை நடத்தி, சரியான இடமாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை