போக்குவரத்துக்கு இடையூராக இருந்த மரக்கிளைகள் அகற்றம்
கடலுார்: கடலுார் பீச் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை மாநகராட்சி பணியாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு செல்லும் பிரதான சாலையின் இரு புறமும் நிழல் தரும் மரங்கள் உள்ளன.மரக்கிளைகள் வளர்ந்து ரோட்டின் பக்கம் நீண்டு இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.மேலும் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கரைக்க, இரு தினங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருக்கிறது.ஊர்வலத்தின் போது மரக்கிளைகள் விநாயகர் சிலை மீது மோதி சேதம் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியது. மாநகராட்சி ஊழியர்கள் பீச் ரோட்டில் உள்ள மரக்கிளைகளை வெட்டி சரி செய்தனர். இதனால் தற்போது பீச் ரோடு விசாலமாக காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.