வெள்ளாறு பால உடைப்பு சீரமைப்பு
சேத்தியாத்தோப்பு: தினமலர் செய்தி எதிரொலியால், சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று பாலம் தடுப்பு கட்டை உடைப்பு சீரமைக்கப்பட்டது.சென்னை-கும்பகோணம் சாலை, சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று பாலம் வழியாக, தென் மாவட்டங்களுக்கு அதிகமாக வாகனம் சென்று வருகிறது. இப்பாலம் படிப்படியாக பராமரிப்பின்றி பழுதடைந்து வருகிறது. பாலத்தின் முகப்பில் தடுப்பு கட்டை சமீபத்தில் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தில் வாகனங்கள் விழும் அபாயம் குறித்து படத்துடன் தினமலர் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பாலத்தின் உடைப்புகளை சீரமைத்தனர்.