உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்

மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்

கடலுார்: கடலுார், செம்மங்குப்பம் உப்பானற்று பாலத்தில் மின் விளக்கு இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் உப்பனாற்று பாலத்தின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்து சித்திரைப்பேட்டை, தம்மானம்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை உட்பட தினமும் பல்வேறு கிராம மக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளிகள் சென்று வருகின்றனர்.பாலத்தின் இரு பக்கமும் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே பாலத்தை கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் விபத்துகள் நடக்கிறது. எனவே, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை