உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்; மந்தாரக்குப்பத்தில் திக். திக்..

அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்; மந்தாரக்குப்பத்தில் திக். திக்..

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுார் - சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், மந்தாரக்குப்பம் கடைவீதி பகுதியில் ஏராளமான குறுக்கு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் புகும்போது விபத்தில் சிக்கி வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தினசரி நடக்கும் விபத்துக்களால் ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலை கடை வீதியில் சாலை அருகே கயிறு அமைத்து அதைத் தாண்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது, ரிப்ளக்டிங் ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டும் இன்றி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி