ரூ.43 லட்சத்தில் சாலை பணி மங்கலம்பேட்டையில் துவக்கம்
விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் 43 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.மங்கலம்பேட்டை 12வது வார்டில், மங்களநாயகி அம்மன் கோவிலை சுற்றி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 43 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன், உதவி பொறியாளர் அன்புகுமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் துவக்கி வைத்தார்.பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் செல்வம், துணைத் தலைவர் பாரி இப்ராஹிம், பேரூராட்சி உறுப்பினர்கள் ராமானுஜம், வேல்முருகன், தீபா, செல்வி, உமா, நுாருல்லா, உமர்பாரூக், நசீமா பானு, தனலட்சுமி, கிருஷ்ணவேணி, மகாலட்சுமி, முஜிபுர் ரஹ்மான், இளநிலை உதவியாளர் ரங்கராமானுஜம் உடனிருந்தனர்.