உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையோர ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்

சாலையோர ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் நகரம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நகரில் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோவில் உடையார்குடி சாலையில் கருவூல பஸ் நிறுத்தத்தில் துவங்கி, டாணாகார தெரு, பஸ் நிலையம், உடையார் குடி ரோடு, கச்சேரி ரோடு தாசில்தார் அலுவலக வாயில் வரையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.அதில், வரும் 10 ம் தேதிக்குள் வியாபாரிகளே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் அடுத்த இரு நாட்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை