உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேமிப்பு கணக்கில் ரூ. 2.50 கோடி போலீசார் தீவிர விசாரணை

சேமிப்பு கணக்கில் ரூ. 2.50 கோடி போலீசார் தீவிர விசாரணை

பண்ருட்டி: தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கில் ஒரே மாதத்தில் ரூ.2.5 கோடி வந்தது ஆன்லைன் மோசடி பணமா என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் அசோக்குமார்,32; முத்தாண்டிக்குப்பம், கனரா வங்கியில் உள்ளஇவரதுசேமிப்பு கணக்கில் கடந்த ஜூலை மாதம்ரூ.2.50 கோடி வந்துள்ளது.வங்கி அதிகாரி விசாரித்த நிலையில் ரூ.2 கோடி 7 வங்கி கணக்குகளுக்கு மாற்றலானது.சந்தேகமடைந்த வங்கி அதிகாரி, சக்திவேலுவின் வங்கி சேமிப்பு கணக்கை முடக்கம் செய்து, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் தனிப்படைபோலீசார், அசோக்குமார் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மும்பையில் இருந்து வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியவர்கள் குறித்தும், ஆன்லைன் மோசடி நபர்களுடன் அசோக்குமாருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், இந்த பண பரிமாற்ற விவகாரம் குறித்து மத்திய உளவுப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை