மங்கலம்பேட்டையில் எஸ்.பி., ஆய்வு
விருத்தாசலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மங்கலம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 48 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவை, வரும் 11ம் தேதி காலை 10:00 மணியளவில், மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக செல்கிறது.அதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி., கிரியா சக்தி தலைமையில்,சிலைகள் அமைந்துள்ள இடங்கள், உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ராஜாராம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, சிலைகள் செல்லும் வீதிகள், ஊர்வலத்தில் பங்கேற்கும் நபர்களை கண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.டி.எஸ்.பி., கிரியா சக்தி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப் -இன்ஸ்பெக்டர்கள் பொட்டா, ராஜ்குமார் உடனிருந்தனர்.