உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 133 வது ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முத்தமிழரசி பார்த்திபன், கவுன்சிலர் செல்வி கர்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். இடைநிலை ஆசிரியை உமா ஆண்டறிக்கை வாசித்தார்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன், ஆசிரியர் பயிற்று னர் பரமசிவம், தி.மு.க. நகர செயலாளர் செல்வ குமார், ஜேசீஸ் சாசன தலை வர் முத்துராமலிங்கம், தலைவர் சிவராமன் வாழ்த்துரை வழங்கினர்.இதில் கல்வி மற்றும் சமூக மேம்பாடு வளர்ச்சி குறித்து உறுதிமொழி ஏற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ