உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்கூட்டி திருடிய ஆசாமி கைது

ஸ்கூட்டி திருடிய ஆசாமி கைது

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் ஸ்கூட்டி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி விழமங்கலம் கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி கலையரசி, 34; பண்ருட்டி பஸ் நிலையத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி, மாலை கடையில் நிறுத்தி வைத்திருந்த அவரது ஸ்கூட்டியை காணவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் கலையரசி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்ட போலீசார் சி.சி.டி.வி.கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.அப்போது, பண்ருட்டி திருக்காமு தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் திருநாவக்கரசு,28; என்பவர் ஸ்கூட்டியை திருடியது தெரியவந்து, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை