மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இளைஞர் கைது; 1 கிலோ கஞ்சா பறிமுதல்
05-Aug-2024
பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சோழன் நகர் 4வது தெருவைச் சேர்ந்த வீரமணி மகன் விஜய், 19; பாண்டியன் மகன் அலெக்ஸ் இருவரும் கஞ்சா விற்பது தெரியவந்தது.போலீசை பார்த்ததும் தப்பியோடியபோது, போலீ சார் விஜய்யை பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந் தது. உடன் அவரை கைது செய்து, தப்பியோடிய அலெக்சை தேடி வருகின்றனர்.இதேபோன்று, சோழன் நகர், பூங்கா பள்ளிக்கூடத்தெரு அருகே அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் பிரவீன், 21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
05-Aug-2024