உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீனஸ் பள்ளியில் கருத்தரங்கு

வீனஸ் பள்ளியில் கருத்தரங்கு

சிதம்பரம்; சிதம்பரம் சி.வக்காரமாரி வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள், பெற்றோர்களுக்கு நல்ஆலோசனை கருத்தரங்கு நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்விற்கு, பள்ளி சேர்மன் வீனஸ்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராதிகா வரவேற்றார். கருத்தரங்கில் எதிர்கால இந்திய தலைவர்களின் தாய்மார்களுக்கான நல் ஆலோசனைகள் என்ற தலைப்பில் நல்லாசிரியர் விருது பெற்ற பூவாலை உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகரஜன் சிறப்புரையாற்றினார். மனவளக்கலை பயிற்சியாளர் சிவராஜன் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பெற்றோர்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.பள்ளி மேலாளர் ராமதாஸ் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி