உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கையுந்து பந்து போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாநில கையுந்து பந்து போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கடலுார்: மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.கடலுாரில் மெட்ரோ நண்பர்கள் சார்பில் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடையான ஆண்கள் மற்றும் பெண்கள் கையுந்து பந்து போட்டி நடந்தது.இதில், வெற்றி பெற்ற அணிக்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் மற்றும் டி.எஸ்.பி., பிரபு கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ் ஜுவல்லரி சார்பில் வெற்றி பெற்ற அணிக்கு உரிமையாளர்கள் கணேசன், ரவிசங்கர், தீபக் ஆகியோர் பரிசு தொகை வழங்கினர்.ஏற்பாடுகளை மெட்ரோ நண்பர்கள் கழக செயலாளர் சிவபாலசங்கர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !