மேலும் செய்திகள்
பேரலை எச்சரிக்கை குமரியில் கட்டுப்பாடு
06-Aug-2024
கடலுார், : கடலுார் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்க கடலின் வடமேற்கு மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனையொட்டி, கடலில் துார புயல் இருப்பதை மீனவர்களுக்கு உணர்த்திடும் பொருட்டு நேற்று கடலுார், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
06-Aug-2024