உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு

மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு

புவனகிரி: புவனகிரி அரசு பள்ளி யில் தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவி, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. இங்கு, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவி நதியா என்பவர் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த நிலையில், பகல் 1:15 மணிக்கு தேர்வு அறையில் மயங்கி விழுந்தார். அந்த மாணவியை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை