உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுச்சாவடி மையங்கள் முறைப்படுத்த ஆலோசனை

ஓட்டுச்சாவடி மையங்கள் முறைப்படுத்த ஆலோசனை

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி மையங்கள் முறைப்படுத்துதல் குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களை முறைப்படுத்தி, அனைத்துக் கட்சி பிரமுகர்களின் முன்மொழிவு பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் உதயகுமார், அந்தோணிராஜ், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். கணினி உதவியாளர் சுரேஷ் வரவேற்றார்.தேர்தல் உதவி தாசில்தார்கள் சாருலதா, சீனிவாசன் உட்பட தி.மு.க.,- அ.தி.மு.க.,- பா.ஜ.,- காங்.,- கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். அதில், விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சின்ன கண்டியங்குப்பம், குப்பநத்தநல்லுார் கிராமங்களில் உள்ள பழுதான ஓட்டுச்சாவடி மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.பெரியார் நகர் இன்பேண்ட் மெட்ரிக் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் 1,500 ஓட்டுகளுக்கு மேல் இருப்பதால், அதனை பிரித்து மற்றொரு ஓட்டுச்சாவடியாக உருவாக்க வேண்டும். திட்டக்குடி சட்டசபை தொகுதியில் ஈ.கீரனுார், செங்கமேடு, துறையூர், காரையூர், மோசட்டை ஊராட்சிகளில் பழுதான ஓட்டுச்சாவடி மையங்களை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, பழுதான ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம், கூடுதல் ஓட்டுச்சாவடிகள் பிரிப்பது குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்கள் ஒப்புதல் பெற்று, டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பேரில், வரும் 2025 ஜனவரியில் வாக்காளர் பட்டியல் புதுப்பித்து வெளியிடப்படும் என ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை