மரக்கன்று வழங்கல்
புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆசிரியர் தின விழாவில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சத்யநாராயணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர், பின்னலுார் ஸ்டேட் பாங்க் கள அலுவலர் எழில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் 450 மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கினார்.