உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஜனை மடம் கட்ட இடம் ஆய்வு

பஜனை மடம் கட்ட இடம் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் பஜனை மடத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஆய்வு செய்தார்.ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் இருந்த பஜனை மடம் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்நிலையில் பஜனை மடத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 21 லட்சம் ரூபாய் செலவில் புதிய பஜனை மடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து புதிய பஜனை மடம் கட்டும் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுபாஷினி பார்வையிட்டு அளவீடு செய்து கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ