உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது கடத்தலை தடுக்க களமிறங்கிய டாஸ்மாக்; மாவட்டத்தில் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையாம்

மது கடத்தலை தடுக்க களமிறங்கிய டாஸ்மாக்; மாவட்டத்தில் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையாம்

தமிழக அரசு, டாஸ்மாக் மதுபான கடைகளின் வருமானத்தில் இருந்தே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை குறைந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை குறைவாகவும், குடிபிரியர்கள் விரும்பும் பல நிறுவனங்களின் சரக்குகள் தாராளமாக அங்கு கிடைப்பதே அதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், கடலுார், பண்ருட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் புதுச்சேரி மாநில மதுபான கடைகளுக்கு படையெடுக்கின்றனர். அதற்கேற்ப தமிழக எல்லை பகுதிகளில் புதுச்சேரி மதுபான கடைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது.மேலும் அங்கிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்து தமிழக பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.எனவே, புதுச்சேரி மாநிலத்தில் குடித்து விட்டு வருபவர்களையும், மது பாட்டில்கள் கடத்தி வருபவர்களையும் தமிழக போலீசார் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மாவட்ட எல்லை பகுதிகளில் 11 செக்போஸ்ட்டுகள் உள்ளது. ஆனாலும் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை உயரவில்லை.இதனால், செக்போஸ்ட்களில் மதுகடத்தலை தடுக்கும் போலீசார் மீது டாஸ்மாக் நிர்வாத்திற்கு நம்பிக்கையில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செக்போஸ்ட் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர், மது கடத்தல் குறித்து கண்காணித்து தங்களின் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது, போலீசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதே சமயத்தில், டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க எங்களை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டனர் என, டாஸ்மாக் ஊழியர்களும் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி