மேலும் செய்திகள்
திருமாவளவன் பிறந்த நாள்
19-Aug-2024
கடலுார்: கடலுார் நகரில் அனைத்து மக்களுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வரி, வாக்கு செலுத்துவோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.கடலுார் வரி மற்றும் வாக்கு செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் 3ம் ஆண்டு விழா புதுப்பாளையம் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். சிறப்பாக சமூக சேவை செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிர்வாகிகள் சாரல் சங்கர், முத்துகுமாரசாமி, முகுந்தன், பிரபுகுமார், ராஜதுரை, பாலசுந்தரம், வாணிவரதன், தண்டபாணி, லோகு, கண்ணன், செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கடலுார் நகரில் சுத்தமான குடிநீர் அனைத்து மக்களுக்கும் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வன்னியர்பாளையத்தில் நவீன தகன மேடை அமைக்க வேண்டும். திருவந்திபுரம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும், நகரில் உள்ள பூங்காக்கள் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
19-Aug-2024