உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் குருகுலம் பள்ளியில் ஆசிரியர் தின விழா

வள்ளலார் குருகுலம் பள்ளியில் ஆசிரியர் தின விழா

கடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளித் தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கி, ஆசிரியர்களை பாராட்டினார். தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். ராஜா வெங்கடேசன் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் வாழ்த்திப் பேசினார். விழாவை தமிழ் ஆசிரியர் பழனிவேல் தொகுத்து வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் வேலவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை