உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீர் மாயம்

காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீர் மாயம்

சேத்தியாத்தோப்பு: காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அமரசாமி மகன் ஜோதிமணி, 13; சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் உள்ள வள்ளலார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28ம் தேதி மாலை காப்பகத்தில் இருந்த ஜோதிமணியை காணவில்லை.இதுகுறித்து குழந்தைகள் காப்பக காப்பாளர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து ஜோதிமணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை