மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி தீவிரம்
19-Aug-2024
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள கோவில்கள், வீடு, அலுவலகங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.மேலும், பல இடங்களில் பொதுமக்கள் பிரம்மாண்ட சிலைகளை வைத்து வழிபடுவர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விருத்தாசலம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள் 2அடி முதல் 9அடி வரை தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்ப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
19-Aug-2024