உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வைக்கோல் வாங்க குவியும் வெளிமாவட்ட வியாபாரிகள்

வைக்கோல் வாங்க குவியும் வெளிமாவட்ட வியாபாரிகள்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பகுதிக்கு, வைக்கோல் வாங்குவதற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் குவிந்து வருகின்றனர்.புதுச்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் பின்பட்ட சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட்ட வயல்களில், கடந்த சில வாரங்களாக அறுவடை நடந்து வருகிறது. அறுவடை முடிந்து வைக்கோல்களை பேலர் மெஷின் மூலம் உருட்டி, வயல்களில் வைத்துள்ளனர். இந்நிலையில், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வெளி மாவட்ட வியாபாரிகள் லாரி, பிக்கப் உள்ளிட்ட வாகனங்களில் வந்து ஒரு வைக்கோல் கட்டு 90 ரூபாய்க்கு, விலை பேசி வாங்கி செல்கின்றனர். தற்போது வெளி மாவட்ட வியாபாரிகள் புதுச்சத்திரம் பகுதியில் வைக்கோல் வாங்க குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை