கோவில் நிலம் விற்பனை கிராம மக்கள் எதிர்ப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கோவில் நிலம், தனி நபருக்கு பத்திர பதிவு செய்து விற்றதை ரத்து செய்ய வேண்டும் என, தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர்.மனுவின் விவரம்:புவனகிரி தாலுகா, சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நான்கரை ஏக்கர் நிலம் உள்ளது. முக்கிய நபர்களின் பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, கன்டிஷன் அடமானம் செய்யப்பட்டு நிலம் பராமரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இடம் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, தனி நபருக்கு விற்பனை செய்துள்ளனர். சேத்தியாத்தோப்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, பத்திர பதிவை ரத்து செய்து உரிய விசாரணை செய்து கோவில் நிலம் அபகரிப்பதை தடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.