உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலையில் நீர் மேலாண்மை கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலையில் நீர் மேலாண்மை கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உலக நீர் தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கு நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக, பொறியியல் புல கட்டடவியல் துறையில் உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரம் மற்றும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கட்டடவியல் துறை தலைவர் பேராசிரியர் மணிக்குமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் முருகப்பன் பங்கேற்று நீரின் முக்கியத்துவம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் நீர் சிக்கனம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் பேராசிரியர் ஞானகுமார், பேராசிரியர்கள் செந்தில்குமார், ஜோதி, குமரவேல், கார்த்திகேயன், சிவப்பிரகாசம், லதா, சீனிவாசன், ரவிச்சந்திரன், ஷீலா, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ