உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் நலப்பணி திட்ட முகாம்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் நலப்பணி திட்ட முகாம்

கடலுார் : கடலுார் வெள்ளப்பாக்கம் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மையியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கல்லுாரி செயலாளர் விஜயகுமார் கலந்து கொண்டு சேவை மனப்பான்மையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். முகாமில், பாலின சமத்துவம், வாக்காளர் விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, முதியோரை பாதுகாத்தல், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம், பிளாஸ்டிக் விழிப்புணர்வு, கண் தானம், உறுப்பு தானம், உடல் தானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வலியுறுத்தி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் முகாமில் ஈடுபட்டனர்.ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் நிர்மலா, கல்லுாரி நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வெண்ணிலா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்