வைட் ஹார்ஸ் ஹெர்பல்ஸ் நிறுவனம் திறப்பு
கடலுார்: கடலுார், சிவானந்தபுரத்தில் வைட் ஹார்ஸ் ஹெர்பல்ஸ் என்ற புதிய மூலிகை எண்ணெய் நிறுவனம் திறப்பு விழா நடந்தது.உரிமையாளர்கள் திவ்யலட்சுமி, ரமேஷ்பாபு வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் பங்கேற்று, புதிய நிறுவனத்தை திறந்து வைத்தார். சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ் குத்துவிளக்கேற்றினர்.மூட்டுவலி, நீரிழிவு காயங்கள் மற்றும் புண், தோல் பிரச்னை, மாதவிடாய் வலி, நரம்பு கோளாறுகள், உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து உடல் உபாதைகளுக்கும் மூலிகை எண்ணெய் பயன்படுத்தலாம்.பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெய்யில் மூலிகைகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பொருட்களால் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம் என, உரிமையாளர் கூறினார். செயலாளர் வீரப்பன் நன்றி கூறினார்.