உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

திட்டக்குடி : திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா நடந்தது.நிகழ்ச்சியில் திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல தலைவர் ரவிச்சந்தர், மண்டல துணைத்தலைவர்கள் பாலச்சந்திரன், ஏழுமலை, கொளஞ்சி முன்னிலை வகித்தனர். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.துணைத் தலைவர்கள் வைஷ்ணவிதேவி, பிச்சையம்மாள், பொறுப்பாசிரியர் பரிமளாதேவி இறைவணக்கம் பாடினர். உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் உழவன் தங்கவேலு, மனைவி நல வேட்பு விழா குறித்து உரையாற்றினார்.ஓய்வுபெற்ற தாசில்தார் அண்ணாதுரை, சந்திரா தம்பதியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.குடும்ப அமைதி, கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட சிறப்பு பயிற்சி மற்றும் காந்த பரிமாற்ற தவம் நடந்தது. விழாவில் 50க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்றனர்.பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ