விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
புதுச்சத்திரம்: வயலாமூரில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். புதுச்சத்திரம் அடுத்த வயலாமூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் வசித்து வருகின்றனர். இங்கு, 500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில், விளையாட முடியாதநிலை உள்ளது. இதனால் அவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அரசுக்கு பல்வேறு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இப்பகுதி இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.