மேலும் செய்திகள்
ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை தொழிலாளி பலி
30-Jul-2024
விருத்தாசலம்: ரயிலில் சிக்கி பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் - சேலம் ரயில்வே மார்க்கத்தில், எருமனுார் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நேற்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில் பாதையொட்டி முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.அதில், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்ற ரயிலில் சிக்கி இறந்திருக்கலாம் என தெரிந்தது. அவர், கத்தரிப்பூ நிற புடவை, கோல்டன் நிற ஜாக்கெட், பச்சை நிற பாவாடை அணிந்திருந்தார். சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Jul-2024