உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகளிர் தின விழா...

மகளிர் தின விழா...

விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் விருத்தாசலம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது. ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பானுமதி தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவர் வசந்தி, ஸ்ரீமுஷ்ணம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, பாடல் ஆசிரியர் அருண்மொழி ஜோதி பங்கேற்று சிறப்புரையாற்றினர். ஏழை எளிய மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கவுரவ செயலர் மணிகண்டராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை