நெய்வேலி ஜெ.ஜெ., என்டர்பிரைசஸ் யமஹா ஷோரூமில் மகளிர் தினவிழா
கடலுார், : நெய்வேலி ஜெ.ஜெ., என்டர்பிரைசஸ் யமஹா ஷோரூமில், சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.விழாவிற்கு, நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், முன்னாள் பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., இந்தியா நிறுவன இதர பிற்படுத்தப்பட்ட நலச்சங்க முன்னாள் பொதுச்செயலாளரும், என்.எல்.சி., தலைமை அலுவலக ஒப்பந்த பிரிவு முதன்மை மேலாளருமான வெங்கடேசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதிய போர்கள் ஓய்வதில்லை புத்தகத்தை, ஷோரூமில் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கினார். கடலுார் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க பொருளாளர் கார்த்தி, பா.ம.க., மூத்த நிர்வாகி சுப்ரமணியன், யமஹா ஷோரூம் பெண் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக பெண் ஊழியர்கள் அனைவரும் ஷோரூம் ஊழியர் வைஷ்ணவி தலைமையில் கேக் வெட்டி மகளிர் தின விழாவை கொண்டாடினர்.