ஸ்கூட்டரில் சென்ற தொழிலாளி சாவு
குறிஞ்சிப்பாடி: மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற கூலி தொழிலாளி கீழே விழுந்து இறந்தார். குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை, திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பை சேர்ந்தவர் கருணாமூர்த்தி, 40; கூலி தொழிலாளி. இவருக்கு திவ்யா, 28, என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். நேற்று முற்பகல் கருணாமூர்த்தி மகள் தன்யா ஸ்ரீ உடன் ஸ்கூட்டரில் சென்றார். அதே பகுதி மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென தானே கீழே விழுந்த கருணாமூர்த்தி மீட்கப்பட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் கருணாமூர்த்தி இறந்தது தெரிய வந்தது. சிறுமி தன்யாஸ்ரீ காயமின்றி தப்பினார். சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.