மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின விழா கோலாகலம்
16-Aug-2024
பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம் Sports Tripur
05-Aug-2024
கடலுார் : கடலுார் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் திண்டிவனம் கம்பன் கழகம் அறக்கட்டளை, சென்னை ஆலந்துார் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம், யாழ்பாணம் முத்தமிழ் மன்றம் இணைந்து உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நடந்தது.கல்லுாரி செயலர் அருட்தந்தை சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிறப்புரையாற்றினார். இதில், ஆஸ்திரேலியா, மலேசியா, துபாய், இலங்கை, சவுத் ஆப்பிரிக்காக, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், 157 ஆய்வு கட்டுரைகள் நுாலாக வெளியிடப்பட்டது.அப்போது, துணை முதல்வர் ஆரோக்கியராஜ், தேர்வு நெறியாளர் சேவியர், கல்வி புல முதன்மையர் அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் வனத்தையன், கம்பன் கழக அறக்கட்டளை செயலாளர் ஞானஜோதி சரவணன் செய்திருந்தனர்.
16-Aug-2024
05-Aug-2024