சிதம்பரம் பள்ளியில் யோகா கருத்தரங்கம்
சிதம்பரம் : சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான யோகா மற்றும் உடல் நலம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.சிதம்பரம், தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். அரசு மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். காந்தி மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பேசினார்.கலைச்செல்வன் நன்றி கூறினார்.