உள்ளூர் செய்திகள்

வாலிபர் கைது

மந்தாரக்குப்பம் : மளிகை கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், 43. மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு இவரது கடைக்கு சென்ற சேப்ளாநத்தம் காமாராஜ் நகரை சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார், 28; என்பவர், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.இதுகுறித்து ராஜசேகர் போலீசில் புகார் கொடுத்தார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமாரை தேடிவந்த நிலையில், கடைவீதியில் போலீசாரை பார்த்து தப்பியோடிய அஜித்குமார் கீழே விழுந்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ராஜ்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை