உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

புவனகிரி: மழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புவனகிரி மற்றும் கீரப்பாளையம் அரசு அலுவலகங்களில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.பருவ மழை துவங்க உள்ள நிலையில், பாதிப்பை தடுக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய நிர்வாகம் பல்வேறு ஆயத்தப்பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறது.கீரப்பாளையத்தில் சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் ஆலோசனையின் பேரில் துணை பி. .டி.ஓ.,ரமேஷ் மேற்பார்வையில் ஒன்றிய அலுவலகத்திலும், நெடுஞ்சாலைத்துறை சாார்பில் புவனகிரி பங்களாவில் உதவி பொறியாளர் ஜெகன் ஏற்பாட்டில் 5 ஆயிரம் மணல் மூட்டைகளும், புவனகிரி பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளர் கவுதமன் ஏற்பாட்டில் மணல் மூட்டைகள் என, மொத்தம் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை