மேலும் செய்திகள்
கடலுாரில் இரண்டாவது நாளாக வெயில் சதம்
20-Jun-2025
கடலுார்:கடலுாரில் நேற்று 101.8 டிகிரி வெயில் பதிவானது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்கள் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இருப்பினும் அதற்கு மாறாக நேற்று வெயில் அதிகரித்து, வெப்ப காற்று வீசியது. அதிகபட்சமாக 101.8 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.
20-Jun-2025