உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு கோஷ்டிகள் மோதல் 11 பேர் மீது வழக்கு

இரு கோஷ்டிகள் மோதல் 11 பேர் மீது வழக்கு

கிள்ளை: கிள்ளை அருகே முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டிகள் மோதிக்கொண்டது தொடர்பாக, 11 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிள்ளை முடசல் ஓடை கிராமத்தில் கடந்த, 21ம் தேதி ஆடி மாத திருவிழாவையொ ட்டி நடந்த சுவாமி ஊர்வலத்தின்போது, முன்விரோதம் காரணமாக கிராம தலைவர் ராமச்சந்திரன் மற்றும் த.வெ.க., பிரமுகர் சோழன் ஆகியோர் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், ராமச்சந்திரன், குணசுந்தரி, இன்பநிலா, சோழன், விஜயந்தி ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் த.வெ.க., பிரமுகர் சோழன், விஜயசாரதி, இளையரசன், ராஜி, கிராம தலைவர் ராமச்சந்திரன், இந்திரகுமார், மோகன்தா ஸ், இந்துஜித், பிரவின், சந்தோஷ், கதிரவன் ஆகிய, 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை