உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வானமாதேவியில் 113 மி.மீ., மழை பதிவு

வானமாதேவியில் 113 மி.மீ., மழை பதிவு

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்நிலையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு பலத்த இடிமின்னலுடன் காற்று வீசியது. பின, மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதி களில் மின் தடை ஏற்பட்டது. தற்போது சூழ்நிலையில், நெல் நடவுக்கு இந்த மழை பெய்தது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை அளவு (மி.மீ.,) வருமாறு: வானமாதேவி 113 மி.மீ., லால்பேட்டை 84, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 80, கடலுார் 73, குறிஞ்சிப்பாடி70, கலெக்டர் அலுவலகம் 69.9, பண்ருட்டி 68, காட்டுமன்னார்கோவில் 65, பெலாந்துறை 63.4, கீழ்ச்செருவாய் 55.2, வடக்குத்து 55, வேப்பூர் 51, லக்கூர் 45, குப்பனத்தம் 30.1, மேமாத்துார் 30, காட்டுமயிலுார் 30, தொழுதுார் 29, சேத்தியாத்தோப்பு 21, ஸ்ரீமுஷ்ணம் 16.2, விருத்தாசலம் 8, அண்ணாமலை நகர் 6.6, சிதம்பரம் 4.5, கொத்தவாச்சேரி 4, பரங்கிப்பேட்டை 2, புவனகிரி 1.மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 113 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !