மேலும் செய்திகள்
பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயின் பறிப்பு
29-Jan-2025
ராமநத்தம் : கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேல்ஐவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மனைவி செல்வராணி, 53. இவர், நேற்று பகல் 1:30 மணியளவில் மேல் ஐவனுார் திட்டக்குடி சாலையில் வெலிங்டன் ஏரி அருகே தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர், செல்வராணி அணிந்திருந்த 13 சவரன் தாலிச்செயினை பறித்து சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாததால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் செல்வராணி அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Jan-2025