மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
15-Jun-2025
கடலுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் நேற்று கும்தாமேடு சோதனைச் சாவடியில் போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்தின்பேரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தைச் சேர்ந்த உக்கரவேல்,54; என்பதும், புதுச்சேரியில் இருந்து 41 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதேப் போன்று, சாவடி சோதனைச்சாவடியில் ் கடலுார், ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன்,40; என்பவர் 31 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 72 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
15-Jun-2025