உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 சிறுமிகள் கர்ப்பம் இருவருக்கு போக்சோ

2 சிறுமிகள் கர்ப்பம் இருவருக்கு போக்சோ

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தனித்தனி சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் கர்ப்பமான புகாரில், 2 வாலிபர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தளபதி, 23. இவரும், பிளஸ் 2 படிக்கும் 17 வயதுடைய சிறுமியும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதேபோல், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெற்றிவேல், 32, என்பவர், 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து, 5 மாதம் கர்ப்பமாக்கினார். ஊர்நல அலுவலர்கள் புவனேஸ்வரி, சாந்தி ஆகியோரது புகார்களின் பேரில், தளபதி, வெற்றிவேல் ஆகிய இருவர் மீதும் போக்சோ, குழந்தை திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி