மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
21-Aug-2025
புவனகிரி புவனகிரி அருகே குட்கா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த மதியழகன், 60; என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் 200க்கும் மேற்பட்ட குட்கா பாக்கட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவரது நண்பர் புவனகிரி அடுத்த தெற்கு திட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரிடமிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரிடம் இருந்தும் 400க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகற் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
21-Aug-2025