உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது

குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது

கடலுார்; குறிஞ்சிப்பாடியில் 2 ரவுடிகளை குண்டர் தடுப்புசட்டத்தில் போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி, அண்ணாநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சூர்யா,25; இவரை கடந்த மார்ச் 8ம் தேதி, குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ராகுல் (எ) வெட்டுராகுல்,28, தனுசு,22, ஹரிஹரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் ராகுல் மீது குறிஞ்சிப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் உள்ளார். குறிஞ்சிப்பாடி அடுத்த நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குமார்,65; இவர் மார்ச் 8ம் தேதி இரவு, விவசாய நிலத்தில் இருந்த மாட்டு கொட்டகையில் துாங்கினார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல், குமாரை தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து ராசாகுப்பத்தைச் சேர்ந்த தியாகு,45; பிரகாஷ்,25; செந்தில்குமார்,31; ஆகியோரை கைது செய்தனர். இதில் தியாகு, வடலுார் போலீஸ் ஸ்டேஷன் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் மீது வடலுார், குறிஞ்சிப்பாடி, வளவனுார் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 8 வழக்குகள் உள்ளன. எஸ்.பி., விஜயக்குமாரின் பரிந்துரையேற்று, இருவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் சட்டடத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி