மேலும் செய்திகள்
பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபருக்கு வலை
24-Nov-2024
பண்ருட்டி : புலவனுாரில் துாங்கிய மூதாட்டியிடம் 2 சவரன் தாலி செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த புலவனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி சரோஜா, 62; இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு துாங்கினர். அதிகாலை 3:00 மணியளவில் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே புகுந்த இரு மர்ம நபர்கள், அறையில் துாங்கிக் கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் இருந்த 2 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதே பகுதியில் 3 வீடுகளில் பாத்திரங்கள் திருடுபோயின. விவசாய மோட்டார் கொட்டகை பூட்டு உடைக்கப்பட்டு மின் மோட்டாரை திருட முயற்சி செய்துள்ளனர். புகாரின்பேரில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
24-Nov-2024