மேலும் செய்திகள்
மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
17-Mar-2025
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே மொபட் மீது டிராக்டர் மோதியதில் 2 பெண்கள் காயமடைந்தனர்.கடலுார் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்த விஜயகுமார் மனைவி ஞானவள்ளி, 25; இவர் தனது சித்தி சஞ்சலாவுடன் மொபட்டில், காடாம்புலியூர் அருகில் உள்ள பாவைக்குளம் சென்று விட்டு நடுவீரப்பட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென மொபட் மீது மோதியது. இதில் ஞானவள்ளி, சஞ்சலா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Mar-2025