உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.எஸ்.ஐ., ஓட்டிய கார் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

எஸ்.எஸ்.ஐ., ஓட்டிய கார் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடலுார்: கடலுாரில், எஸ்.எஸ்.ஐ., ஓட்டிச்சென்ற கார் மோதி, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கடலுார், கண்ணாரப்பேட்டை அடுத்த அன்னவல்லியை சேர்ந்தவர்கள் வடிவேல், 45; பாஸ்கர், 47; சுப்ரமணியபுரம் அடுத்த பெரியகாட்டுசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ், 45; கட்டட தொழிலாளர்கள். மூவரும் நேற்று மாலை, 5:00 மணிக்கு வேலை முடிந்து, அன்னவல்லி பஸ் நிறுத்தம் அருகில், சம்பள தொகையை பிரித்துக் கொண்டிருந்தனர். அன்னவல்லியை சேர்ந்த ஹோட்டல் கடைக்காரர் மோகன், 60; உடனிருந்தார். அப்போது, கடலுாரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற மாருதி சுசூகி கார், அவர்கள் மீது மோதியதில், வடிவேல், ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பாஸ்கர் காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த, இருவரையும் சரமாரியாக தாக்கினர். கடலுார், முதுநகர் போலீசாரின் விசாரணையில், கார் ஓட்டியது ஆவினங்குடி எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், உடன் வந்தது சக போலீஸ்காரர் இமாம் உசேன் என தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ